Categories
தேசிய செய்திகள்

1,700 பெற்றோரை இழந்த குழந்தைகள்… உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல்…!!

கொரோனா காரணமாக நாடு முழுவதும் 1700 குழந்தைகள் பெற்றோரை இழந்துள்ளதாக தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் உச்சநீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக பல குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து தவித்து வருகின்றனர். அப்படி உள்ள குழந்தைகளுக்கு அந்த மாநில அரசு உதவிதொகை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகங்களில் கொரோனா தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் வசதிகள் குறித்து உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கில் தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அதில் கொரோனா காரணமாக நாடு முழுவதும் 1,700 குழந்தைகள் தங்களது பெற்றோர்களை இழந்து வாழ்ந்து வருவதாக கூறியுள்ளது. மேலும் தாய் அல்லது தந்தையை மட்டும் இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 7,400 ஆக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதையடுத்து பெற்றோர்களை இழந்த குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாநில அரசுகள், தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் பதில் அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |