Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அஜித் வீட்டுக்கு மிரட்டல்…. மனநல மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரை….!!!!

நடிகர் அஜித்தின் வீட்டிலும், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தெரிவித்தார். இதையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் அஜித்தின் வீடு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சோதனை செய்தனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் அங்கு கண்டுபிடிக்கப்படவில்லை. அதன் பிறகு அது பொய்யான மிரட்டல் என தெரியவந்தது.

இதனையடுத்து கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தொலைபேசி எண்ணை வைத்து மிரட்டல் விடுத்த நபரை போலீசார் கண்டுபிடித்தனர். அவரும் அரக்கோணத்தை சேர்ந்த தினேஷ் என்பதும் அவர் மனநிலை சரியில்லாதவர் என்பதும் தெரியவந்தது. அவர் ஏற்கனவே ரஜினிகாந்த் வீடு மற்றும் எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்தபோது அவரது வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார். இதனையடுத்து அந்த நபரை மனநல மருத்துவமனையில் சேர்க்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |