Categories
கிரிக்கெட் விளையாட்டு

“யார் வந்தாலும், வரலைனாலும்”….”பிளான் பண்ண மாதிரி ஐபில் நடக்கும்” ….”கரார் காட்டிய பிசிசிஐ “…!!!

மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் ஏற்பட்டுள்ளது.

14 வது ஐபிஎல் தொடரில் வீரர்களுக்கு கொரோனா  பாதிப்பு ஏற்பட்டதால், போட்டிகள் பாதியில் நிறுத்தப்பட்டது. இதில் 29 போட்டிகள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள, நிலையில் மீதமுள்ள 31 போட்டிகளை வருகின்ற செப்டம்பர் 18ஆம் தேதி முதல் அக்டோபர் 10ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. ஆனால் மீதமுள்ள போட்டிகளில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.  இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ,இங்கிலாந்து அணி வீரர்கள் மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் பங்கேற்க மாட்டார்கள் என்று முன்பே அறிவித்திருந்தது . இதைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் பிரீமியர் லீக் போட்டி நடைபெறுவதால்,  ஐபிஎல் தொடர் தொடக்கத்தின் போது , சில போட்டிகளில் அவர்கள்  விளையாடுவது சந்தேகம்தான். அதோடு ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்களில் பலரும்  , ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதில் விரும்பவில்லை.

இதுகுறித்து தகுந்த நேரத்தில் முடிவெடுக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து வங்காளதேச வீரர்களான ஷகிப் அல் ஹசன், முஸ்தாபிசுர் ரகுமான் ஆகியோரும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க , வங்காளதேச கிரிக்கெட் வாரியம் அனுமதிக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்காவிட்டாலும் , திட்டமிட்டபடி மீதமுள்ள போட்டிகள் கட்டாயம் நடைபெறும் என்று பிசிசிஐ காட்டமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிசிசிஐ-யின் துணை  தலைவரான ராஜீவ் சுக்லா கூறும்போது,” மீதமுள்ள ஐபிஎல் போட்டியில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். எங்களுடைய ஒரே நோக்கம் , ஐபிஎல் போட்டியை நடத்தி முடிப்பது மட்டும்தான். இதில் வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்காவிட்டாலும் போட்டி திட்டமிட்டபடி நடைபெறும். மீதமுள்ள போட்டிகளை நடத்த ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் முன்பே சென்று விட்டனர் “,என்று அவர் கூறினார்.

Categories

Tech |