Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கொரோனாவை துரத்திட தடுப்பூசியே சிறந்த வழி…. விழிப்புணர்வு பாடல் எழுதிய மாவட்ட சூப்பிரண்ட்…. ராணிப்பேட்டையில் நடந்த நிகழ்ச்சி….!!

ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டு கொரோனா தடுப்பூசி குறித்த விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார்.

தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கொரோனாவின் 2 ஆவது அலையை முற்றிலுமாகத் துரத்திவிட தடுப்பூசியே சிறந்த வழியாகும். இந்த கருத்தை பொதுமக்களிடம் மிக வேகமாக கொண்டு செல்வதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தினுடைய காவல்துறை சூப்பிரண்டான சிவகுமார் விழிப்புணர்வு பாடலை எழுதியுள்ளார்.

இந்தப் விழிப்புணர்வு பாடலை பிரபல இசையமைப்பாளர் மற்றும் பாடகரான கிருஷ், அவருடைய குழுவினர்கள் பாடியுள்ளனர். இதனை ராம் கோபி எடிட்டிங் செய்துள்ளார். இப்பாடலுக்கான வெளியீட்டு விழா காவல்துறை சூப்பிரண்டு அலுவலகத்தில் வைத்து நடந்தது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Categories

Tech |