சீன அரசு, தங்கள் நாட்டிலுள்ள தம்பதிகள் இனிமேல் 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளது.
சீனாவில் இரண்டு குழந்தைகள் வரை தான் பெற்றுக்கொள்ள வேண்டுமென்ற கட்டுப்பாடு நடைமுறையில் இருந்தது. இந்நிலையில் சீனாவில் குழந்தை பிறப்பு வீதம் சரிவை அடைந்துள்ளதாக சமீபத்திய தகவலில் தெரியவந்துள்ளது. இதனால் அந்நாட்டு அரசு 3 குழந்தைகள் வரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
சீனாவில் பல வருடங்களாகவே ஒரு குழந்தை தான் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கை நடைமுறையில் இருந்தது. கடந்த 2016 ஆம் வருடத்தில் தான் அந்த விதியை சீனா ரத்து செய்தது. மேலும் சீனாவின் பல நகரங்களில் குழந்தை பராமரிப்பிற்கு அதிக பணம் செலவாகும் என்ற பயத்தால் பல தம்பதியினர் குழந்தைகள் பெற்றுக்கொள்வதை தவிர்த்தனர்.
இதனால் தான் குழந்தை பிறப்பு எண்ணிக்கை வெகுவாக சரிவை அடைந்தது. எனவே தான் தற்போது இந்த கொள்கை நடைமுறைப்படுத்தப்போவதாக Xinhua என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தக் கொள்கை மாற்றத்தில் சில சலுகைகளும் இருக்கிறது என்று கூறப்பட்டிருக்கிறது.
எனினும் இந்த கொள்கைக்கு சீன இணையதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது. அதாவது சில தம்பதியினர் ஒரு குழந்தை, இரண்டு குழந்தைகளை வளர்ப்பதே சிரமமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.