ராணிப்பேட்டையில் தடுப்பூசியை போட்டுக் கொண்டால் மட்டுமே கடையை திறப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
தமிழகத்தில் தற்போது பரவிவரும் கொரோனாவை கட்டுப்படுத்த அரசாங்கம் அனைவரையும் தடுப்பூசி போடுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மற்றும் பனப்பாக்கம் பேரூராட்சியின் சார்பாக பொதுமக்கள் அச்சமின்றி தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டது.
அதிலும் முக்கியமாக கடைகளில் வேலை செய்யும் பணியாளர்களும், வியாபாரிகளும் கொரோனாவிற்கான தடுப்பூசியை செலுத்திக்கொண்டு அதற்கான சான்றிதழ்களை பேரூராட்சியிலிருந்து வாங்கியிருந்தால் மட்டுமே ஊரடங்கு முடிந்த பின்னர் கடையை திறப்பதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று பேரூராட்சியினுடைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.