சேலம் மாவட்டத்தில் கொரோனா ஊரடங்கால் பூக்கள் விற்பனை செய்ய முடியாமல் பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்திலுள்ள திம்பம்பட்டி, கம்மாளப்பட்டி குரால்நத்தம் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் அரளிப்பூ சாகுபடி செய்துள்ளனர். அந்த கிராமங்களில் அறுவடை செய்யப்படும் அரளிப்பூக்கள் கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கும் கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதுடன் மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவது வழக்கம்.
இந்நிலையில் கொரோனாவின் 2 வது அலையின் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் போக்குவரத்து தடைப்பட்டுள்ளது. இதனால் நாள்தோறும் லட்சகணக்கான ஏக்கரிலுள்ள பூக்கள் பறிக்காமல் செடியிலேயே கருகி மண்ணோடு மண்ணாகி வருவதால் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால் விவசாயிகள் மனவேதனை அடைந்துள்ளனர்.