ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர் ஷிவ தபா இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.
ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி துபாயில் நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் நடந்த ஆண்களுக்கான (64 கிலோ) எடைப்பிரிவில் , அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரரான ஷிவ தபா , தஜிகிஸ்தான் வீரரான பகோதுர் உஸ்மோனோவுடன் மோதி, 4-0 என்ற கணக்கில் வெற்றிபெற்று இறுதிக் போட்டிக்கு முன்னேறியுள்ளார். அதுபோல் ஆண்களுக்கான (91 கிலோ) எடை பிரிவில், அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரரான சஞ்சீத், உஸ்பெகிஸ்தான் வீரரான துர்சுனோவ் சான்ஜருடன் மோதி , 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இதைத்தொடர்ந்து (60 கிலோ) எடைப்பிரிவில் அரையிறுதிச் சுற்றில் இந்திய வீரரான வரிந்தர் சிங் 2-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து, வெண்கலப்பதக்கத்துடன் திரும்பினார் . (69 கிலோ) எடைப் பிரிவில் இந்திய வீரர் விகாஸ் கிருஷ்ணன் , உஸ்பெகிஸ்தான் வீரரான பாதுரோவ் பாபா உஸ்மானுடன் மோதினார். ஆனால் இந்தப் போட்டியில் முதல் ரவுண்டில், விகாஸ் கிருஷ்ணனின் கண் அருகில் , காயம் ஏற்பட்டதால் பாதியில் விலகினார். இதனால் அவருடன் மோதிய பாதுரோவ் இறுதிபோட்டிக்கு முன்னேறினார் . இதனால் விகாஸ் கிருஷ்ணன் வெண்கலப் பதக்கத்தைப் பெற்றார்.