Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமாக செய்த செயல்… சோதனையில் சிக்கிய மூதாட்டி… காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை..!!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்ட பெண்ணை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து கைது செய்துள்ளனர்.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் போலீஸ் சரகத்தை சேர்ந்த முக்குடி கிராமம் என்னும் பகுதியில் சட்டவிரோதமாக கள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்பிரிவு காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் முக்குடி பகுதிக்கு காவல்துறையினர் விரைந்து சென்று சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மதுரை அனுப்பானடி பகுதியில் வசித்து வரும் கோவிந்தம்மாள் ( 65 ) என்பவரை காவல்துறையினர் கையும், களவுமாக பிடித்து விசாரித்துள்ளனர்.

அந்த விசாரணையில் மூதாட்டி பதுக்கி வைத்திருந்த 10 லிட்டர் கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் சட்டவிரோதமாக கள் விற்பனையில் ஈடுபட்ட குற்றத்திற்காக அந்த மூதாட்டியை கைது செய்துள்ளனர்.

Categories

Tech |