முன்னணி நடிகர் அருண் விஜய்யின் அழகிய சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் வெளியான முறை மாப்பிள்ளை எனும் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி அதன் பின் அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் அருண் விஜய் சினம், வார்னர், வாட்சன் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது பல நடிகர், நடிகைகளின் சிறுவயது புகைப்படம் இணையத்தில் வெளியாகி வருகிறது அந்த வகையில் அருண் விஜய்யின் அழகிய சிறுவயது புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.