Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

நம்பவே முடியல… அந்த படம் வெளியாகி 6 வருஷம் ஆயிடுச்சு… நிவின் பாலி டுவீட்…!!!

நடிகர் நிவின் பாலி தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மலையாள திரையுலகில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் பிரேமம் . இந்த படத்தில் அனுபமா பரமேஸ்வரன், சாய் பல்லவி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் மலையாள ரசிகர்களை மட்டுமல்லாது தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில் இன்றுடன் (மே 29) பிரேமம் படம் வெளியாகி 6 வருடங்கள் நிறைவடைந்ததை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் நடிகர் நிவின் பாலி தனது டுவிட்டர் பக்கத்தில் ‘பிரேமம் படம் வெளியாகி 6 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதை நம்பமுடியவில்லை. இயக்குனர் அல்போன்ஸ் புத்திரனுக்கு நன்றி’ என பதிவிட்டுள்ளார். தற்போது அவரின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |