மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த ,பிசிசிஐ முடிவு செய்துள்ளது.
பிசிசிஐ-யின் சிறப்பு பொதுக் கூட்டம் ,காணொளி வாயிலாக இன்று நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு , பிசிசிஐ தலைவராக சவுரவ் கங்குலி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் இந்தியாவில் தற்போது கொரோனா தொற்று பரவலுக்கு மத்தியில், வருங்கால கிரிக்கெட் போட்டிகளை, நடத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டது . இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளை நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற இருப்பதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.இந்தியாவில் நடைபெற்று வந்த 14வது ஐபிஎல் தொடரில், பயோ பபுளையும் மீறி சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டதால் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது இதனால் எஞ்சிய போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தமுடிவு செய்யப்பட்டுள்ளது.