நாட்டறம்பள்ளி அருகில் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வெலக்கல்நத்தம் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 6 மாதமாக குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளனர். ஆனால் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்காததால் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வந்திருக்கின்றனர்.
இந்நிலையில் ஊராட்சி மன்ற சார்பில் குடிநீர் கிடைப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் கோபமடைந்த பொதுமக்கள் அலுவலகத்திற்கு முன்பு காலி குடங்களுடன் முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் நீண்ட நேரமாக போராட்டம் நடத்தியும் அதிகாரிகள் யாரும் வராததால் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றுள்ளனர். மேலும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக குடிநீர் கிடைப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.