கர்ணன் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ளதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் கர்ணன். கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரெஜிஷா விஜயன், யோகிபாபு, கௌரி கிஷன், லால் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். கலைப்புலி.எஸ்.தாணு தயாரித்த இந்த படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.
Here is the minimal poster celebrating50 days of #Karnan#50daysofkarnan
Design by @vibhin11 @mari_selvaraj @dhanushkraja
@RajishaVijayaan @theVcreations @Music_Santhosh @thinkmusicindia @thenieswar #KarnanOnPrime @PrimeVideoIN pic.twitter.com/il3oeVBhge— Sathish Kumar M (@sathishmsk) May 28, 2021
இந்த படத்தின் பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் கர்ணன் திரைப்படம் வெளியாகி 50 நாட்கள் கடந்துள்ளதை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் கர்ணன் படத்தின் முழு கதையை சொல்லும் வகையில் ஒரு ஸ்பெஷல் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.