புதுக்கோட்டை மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய வாலிபர்களை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அப்பகுதியிலுள புளியந்தோப்பில் கும்பலாக பணம் வைத்து சூதாடி கொண்டிருந்ததை காவல் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து பணம் வைத்து சூதாடி கொண்டிருந்த ரவிச்சந்திரன், ராஜேஷ்குமார், ராமன், சத்தியமூர்த்தி உள்ளிட்ட 10 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இதனை தொடர்ந்து அவர்களிடமிருந்து 7 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 27 ஆயிரத்து 150 ரூபாய் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.