ஆன்லைன் மூலம் பிறப்பு சான்றிதழ் எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி இதில் தெரிந்து கொள்வோம்.
ஒரு மனிதன், பிறக்கும் போது, அவன் வாழும் காலம் வரை அவனது பிறப்புச்சான்றிதழ் பயன்படும்.இதனை 30 நாட்களுக்குள் பதிவு செய்யவேன்டும். ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவாளருக்கு பதிவு செய்ய அதிகாரம் இல்லை நீதிமன்ற உத்திரவுமூலம் மட்டுமே ஒராண்டு கடந்த பின்பு பிறப்பு- இறப்பு பதிவு செய்ய முடியும். ஆன்லைன் மூலம் பிறப்புச் சான்றிதழ் பெற முதலில் இந்த இணையதளத்திற்குச் செல்லுங்கள்.
https://etownpanchayat.com/PublicServices/Birth/ApplyBirth.aspx#!
இதில் கேட்கப்பட்டிருக்கும் விவரங்களைப் பூர்த்திசெய்யவேண்டும். உங்களது விவரம், முகவரி, குழந்தையின் விவரம், மனைவியின் விவரம், முகவரி என அனைத்தையும் நிரப்ப வேண்டும். பின்னர் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் சப்மிட் ஆப்ஷனைக் க்ளிக் செய்யவேண்டும். தொடர்ந்து உங்களது தொலைப்பேசி எண்ணிற்கு ஒரு ஒப்புகை எண் வரும். அவற்றைக் கொண்டு மீண்டும் Birth certificate search ஆப்ஷனுக்குள் செல்ல வேண்டும்.
பின்னர் அதில் கேட்கும் கூடுதல் தகவல்களைக் கொடுத்து ஜெனரேட் அப்ஷனைக் கொடுக்க வேண்டும். பின்னர் பிறப்புச் சான்றிதழை நீங்கள் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம்.