சேலம் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நேரடியாக வீடுகளுக்கு சென்று கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைப்பெற்றுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக் கொள்ள பொதுமக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் சேலம் மாநகராட்சி பகுதிகளிலுள்ள 16 ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் 18 வயது 44 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது.
அதில் மாவட்டத்தில் மொத்தம் 18 வயது முதல் 45 வயது வரை உள்ள மாற்றுத்திறனாளிகள் 1,300 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நேரடியாக அவர்கள் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுள்ளது. அந்த பணியை மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் பார்வையிட்டு ஆய்வு செய்துள்ளார்.