கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்கள், பொது நிறுவனங்கள் தங்களால் இயன்ற உதவியை முதல்வர் பொது நிவாரண நிதிக்கு வழங்குங்கள் என்று அறிவித்திருந்தார். இதையடுத்து பல பிரபலங்களும், நிறுவன உரிமையாளர்களும் உதவித்தொகை வழங்கி வருகின்றன.
அதுமட்டுமில்லாமல் சிறு சிறு குழந்தைகளும் கூட தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை கொரோனா நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கின்றன. எனவே கொரோனா நிதி வழங்கும் சிறார்களுக்கு திருக்குறள் நூல் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: ” சிறுக சிறுக சேமித்து வைத்திருக்கும் சேமிப்பை சிறுவர்கள் வழங்கி வருகின்றன. பிஞ்சு உள்ளங்களில் பெருங்கருணை என் நெஞ்சை நெகிழ வைக்கின்றது. நிதி வழங்கும் சிறுவர்களுக்கு அரசின் சார்பில் திருக்குறள் நூல் வழங்கப்படும்” என அவர் தெரிவித்துள்ளார்.