Categories
உலக செய்திகள்

காவல் நிலையத்திற்குள் நுழைந்து மர்மநபர் வெறிச்செயல்.. குற்றவாளியை வலைவீசி தேடி வரும் அதிகாரிகள்..!!

பிரான்ஸில் சமீபத்தில் தான் காவல்துறையினர் பாதுகாப்புக்கேட்டு பேரணி நடத்தியிருந்த நிலையில், தற்போது பெண் காவலதிகாரி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

பிரான்சில் உள்ள Nantes என்ற நகரில் இருக்கும் La-Chapelle-sur-Erdre என்ற கிராமத்தில் உள்ள காவல் நிலையத்திற்குள் காலையில் திடீரென்று ஒரு நபர் கத்தியுடன் வந்திருக்கிறார். இதனைத்தொடர்ந்து எதிர்பாராத நிலையில் பெண் காவல் அதிகாரி ஒருவரை கத்தியால் தாக்கியுள்ளார்.

இதில் அவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் பின்பு அந்த நபர் அங்கிருந்து ஒரு வாகனத்தில் தப்பி சென்றுள்ளார். ஆனால் வாகனம் ஒரு இடத்தில் மோதியவுடன் அதிலிருந்து இறங்கி தப்பி ஓடியுள்ளார்.

எனினும் அந்த நபர் எதற்காக தாக்கினார்? என்பதற்கான காரணம் தெரியவில்லை. எனவே காவல்துறையினர் அப்பகுதியில் வசிக்கும் மக்களை, தங்கள் வீடுகளில் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரித்துள்ளார்கள். மேலும் 200க்கும் அதிகமான காவல்துறையினர்  ஹெலிகாப்டர்கள் மற்றும் மோப்பநாய்களுடன் அந்த நபரை தீவிரமாக தேடி வருகிறார்கள்.

Categories

Tech |