Categories
உலக செய்திகள்

14 பேரின் உயிரை பறித்த கேபிள் கார் விபத்து.. திட்டமிட்டு பிரேக்கிங் அமைப்பை துண்டித்த மூவர் கைது..!!

இத்தாலியில் சமீபத்தில் நடந்த கேபிள் கார் விபத்திற்கு காரணமாக இருந்த அதிகாரிகள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இத்தாலியில் சமீபத்தில் நடந்த கேபிள் கார் விபத்தில் குழந்தைகள் உட்பட 14 நபர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் இந்த விபத்திற்கான காரணம் நான் தான் என்று தொழில்நுட்பவியலாளர் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார். விபத்துக்குள்ளான கேபிள் கார் போக்குவரத்தை நடத்திக்கொண்டிருக்கும் நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மூவரும் காவல்துறையினரால் கடந்த புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தற்போது வரை அவர்களிடம், மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், விபத்திற்கான முக்கிய காரணம் இந்த மூவர் தான் என்று தெரியவந்துள்ளது. இதில் Gabriele Tadini என்ற நபர்,  வேண்டுமென்றே, திட்டமிட்டு தான் அவசர பிரேக்கிங் அமைப்பை துண்டித்ததாக தெரிவித்துள்ளார். இதனை அவரே ஒத்துக்கொண்டதால், மூன்று அதிகாரிகளுக்கும் கடும் தண்டனை விதிக்கப்படவுள்ளது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |