இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அரசுக்கு உறுதுணையாக மருத்துவர்கள் முதல் சுகாதாரத்துறை பணியாளர்கள் வரை அனைவரும் பணியாற்றி வருகிறார்கள். கொரோனா காலகட்டத்தில் அவர்களின் பணி இன்றியமையாதது. ஆனால் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சிலர் உயிரிழக்கும் அபாயம் ஏற்படுகிறது.
இந்நிலையில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டு உயிரிழக்கும் மருத்துவ பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி தரலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் யோசனை வழங்கியுள்ளது. மருத்துவர்,செவிலியர் மற்றும் தூய்மைப் பணியாளர் குடும்பத்தில் ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசு பணி வழங்கலாம். கொள்கை முடிவு தொடர்பானது என்பதால் அரசுதான் கனிவுடன் பரிசீலிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்துள்ளார்