Categories
சினிமா தமிழ் சினிமா

கமல் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா….? இணையத்தில் பரவிய தகவலுக்கு முற்றுப்புள்ளி….!!!

கமல் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறார் என்ற தகவல் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் கமல்ஹாசன் தற்போது தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “விக்ரம்” எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது கொரோனா ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் தொற்று பரவல் குறைந்தவுடன் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.

இத்திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் மற்றொரு முன்னணி நடிகரான விஜய் சேதுபதி மற்றும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் ஆகியோர் இணைந்து உள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகியும், கமல்ஹாசனின் மகளுமான ஸ்ருதிஹாசன் ‘விக்ரம்’ படத்தில் இணைகிறார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. இதனை அறிந்த ஸ்ருதிஹாசன் இது குறித்து விளக்கமளிக்கையில், அப்பாவின் விக்ரம் படத்தில் இருந்து இதுவரை எனக்கு எந்தவித அழைப்பும் வரவில்லை என்று கூறியுள்ளார்.

Categories

Tech |