டெல்லியை சேர்ந்த நபரொருவர் ஹீலியம் பலூனில் நாயை கட்டி பறக்கவிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் கண்டனத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியை சேர்ந்த இளைஞர் ஒருவர் யூடியூப் ஒன்றை நடத்தி வருகிறார். அவரது சேனலில் 40 லட்சத்துக்கும் அதிகமானோர் சப்ஸ்கிரைப் செய்துள்ளன. இவரது வீடியோக்கள் பல லட்சம் வியூஸ்களை அள்ளிக் குவிக்கும். சமீபத்தில் இவர் தனது நாய்க்குட்டியை ஹீலியம் பலூனில் கட்டி பறக்க விட்டு அதை வீடியோவாக எடுத்து அவரது சேனலில் அப்லோட் செய்து இருந்தார். அந்த வீடியோவை பார்த்த பலரும் நாயை வதைப்பதாக கருத்து தெரிவித்து வந்தனர்.
பல எதிர்ப்புகள் வந்த காரணத்தினால் அந்த வீடியோவை டெலிட் செய்தனர். உரிய பாதுகாப்பு வசதியுடன் நாயை கட்டி பறக்கவிட்டதாகவும், நாயை வரதை செய்யவில்லை என்று அந்த யூடியூப் பிரபலம் விளக்கமளித்தார். ஆனாலும் டெல்லியில் உள்ள மால்வியா நகர் காவல் நிலையத்தினர் யூடியூபர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.