Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மொத்தம் 31 ஆயிரத்து 299 பேருக்கு போட்டாச்சு… முதல் தவணை தடுப்பூசி… ஆர்வமுடன் போட்ட பொதுமக்கள்…!!

சேலம் மாவட்டத்தில் முதல் தவணையாக 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு  தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தொற்றிலிருந்து காப்பாற்றிக்கொள்ள பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி போடுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் 45 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போப்பட்டுள்ளது.

தற்போது 18 வயது முதல் 44 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி அரசு மருத்துவமனைகள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் போடப்பட்டு வருகின்றது.  இதுவரை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களில் 18 வயது முதல் 45 வயதுடைய 31 ஆயிரத்து 299 பேருக்கு கோவேக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசி  போடப்பட்டுள்ளது.

Categories

Tech |