அமெரிக்காவில் 14 வயது மாணவன், சக மாணவியை 114 தடவை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் வசிக்கும் 13 வயது சிறுமி Tristyn Bailey, கடந்த 9ஆம் தேதியன்று மாயமாகியுள்ளார். அதற்கு மறுநாள் காலையில் அவர் காணாமல் போனதாக அறிவிப்பு வெளியாகி காவல் துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த சமயத்தில் Bailey உடன் பயிலும் Aiden Fucci என்ற மாணவரை காவல்துறையினரின் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். எனினும் அவரின் கைகளில் விலங்கிடாமல், அவரிடமிருந்த செல் போனையும் காவல்துறையினர் வாங்கவில்லை. எனவே Aiden காவல்துறையினரின் வாகனத்திற்குள் இருந்துகொண்டு ஒரு செல்பி எடுத்துள்ளார்.
அதனை இணையத்தளத்தில் பதிவிட்டு, அதில் நண்பர்களே, Baileyயை எவரேனும் பார்த்தீர்களா? என்று குறிப்பிட்டுள்ளார். அதனால் தான் பிரச்சனை கிளம்பியுள்ளது. அதாவது அச்சிறுமி இறந்ததற்கு பின்பு, அவரின் உடல் கண்டறியப்படுவதற்கு முன்பு அந்த செல்பியை அவர் வெளியிட்டிருக்கிறார்.
அதாவது ஒரு பெண்ணை கொன்று விட்டு, சிறிது கூட குற்றவுணர்வின்றி, அச்சமின்றி செல்பி எடுத்து இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் Aiden வீட்டுக்கு அருகே உள்ள பகுதியில் Baileyயின் சடலம் கிடப்பதாக அந்த பகுதியை சேர்ந்த ஒரு நபர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த சிறுமியின் உடலில் Aiden னின் DNA கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் இருவரும் ஒன்றாக சென்ற காட்சிகள் பதிவாகியுள்ளது. எனினும் Aidenக்கு 14 வயது தான் ஆகிறது. எனவே இந்த வழக்கை சிறுவர்களின் வழக்காக மேற்கொள்வதா? அல்லது கொலை வழக்காக தொடர்வதா? என்ற விவாதம் நடந்து வருகிறது.
இதனைத்தொடர்ந்து சிறுமியின் பிரேத பரிசோதனை முடிவுகள் வெளியாகியுள்ளது. அதில் சுமார் 114 தடவை Aiden, அவரை கத்தியால் குத்தியுள்ளது தெரியவந்துள்ளது .