சேலம் மாவட்டத்தில் உடல் நிலை சரியில்லாததால் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்திலுள்ள தாதம்பட்டி பகுதியில் ராமசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தெய்வானை என்ற மனைவி இருந்தார். இவருக்கு கடந்த சில மாதங்களாகவே உடல்நிலை சரியில்லாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் இரவு தூங்கச் சென்ற தெய்வானை மனவேதனை அடைந்து அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதனையடுத்து காலையில் வெகு நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால் கணவர் ராமசாமி மனைவி அறைக்கு சென்று பார்த்த போது தெய்வானை அறையில் பிணமாக தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதனைப் பார்த்து கதறி அழுத கணவர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தெய்வானை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.