Categories
விளையாட்டு

ஆசிய குத்துச்சண்டை போட்டி : “கொரோனாவை தோற்கடித்தது போல் உணர்கிறேன்”…. இந்திய வீரர்  ஷிவதபா…!!!

ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் ,இந்திய வீரரான  ஷிவதபா 64 கிலோ எடை  பிரிவில் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

துபாயில் நடைபெற்று  வரும் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் 17 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டுள்ளனர். இதில் ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில்       5 வது முறையாகத் தொடர்ந்து பதக்கத்தை வெல்லும் , அசாமைச் சேர்ந்த இந்திய வீரர் ஷிவதபா (வயது 27) நேற்று பேட்டியில் கூறும்போது, “ஆசிய குத்துச்சண்டைபோட்டி வரலாற்றில் ஆண்கள் பிரிவில் அதிக பதக்கங்களை வென்ற இந்திய வீரர், என்ற சாதனையை  நினைக்கும் போது, உண்மையில் மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்த சாதனையை படைத்த முதல் இந்திய வீரராக நான் இருப்பேன், என்று நான் நினைத்துக்கூட பார்த்ததில்லை. இதுவரை நான் வென்ற பதக்கங்களில் எது சிறந்தது என்று கேட்டதற்கு, ஒவ்வொரு பதக்கமும் வெவ்வேறு விதமான சூழலில் வென்றது. இதில் எது சிறந்தது என்று சொல்ல முடியாது. தற்போது நிலவும் இந்த கொரோனா பரவலால் , உலகமே ஸ்தம்பித்துப் போய் உள்ளது. இந்த சூழலில் நான் போட்டியில் பதக்கத்தை உறுதி செய்திருக்கிறேன். இதனால் மனரீதியாக ,நான் கொரோனாவை தோற்கடித்தது போல் உணர்கிறேன் “, என்று அவர் கூறினார்.

Categories

Tech |