Categories
தேசிய செய்திகள்

WhatsApp பயன்படுத்துபவர்களுக்கு…. மத்திய அரசு திடீர் அறிவிப்பு….!!!!

தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.

ஆனால் வாட்ஸ்அப் பயனாளர்களின் மெசேஜ்கள் மற்றும் கால்கள் அனைத்தும் இனி கண்காணிக்கப்படும் என புதிய தகவல் ஒன்று வெளியாகியது. இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிகள் குறித்து வாட்ஸ் அப் பயனாளர்கள் பயப்பட தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதிய விதிகள் துஷ்பிரயோகம், தவறாக பயன்படுத்துபவர்கள் மற்றும் குற்றம் செய்பவர்களை கண்காணிக்க மட்டுமே கொண்டு வரப்பட்டது. ஏதேனும் புகார்கள் வந்தால் மட்டுமே வாட்ஸ்அப் மெசேஜ்கள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |