Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த வயதில் கல்யாணமா…? பெற்றோர்களிடம் எழுதி வாங்கிகிட்டோம்…. சைல்டுலைன் அதிகாரிகளின் அதிரடி….!!….

சட்டவிரோதமாக 18 வயது பூர்த்தியாகாத 2 மாணவிகளுக்கு நடைபெற இருந்த திருமணத்தை சைல்டுலைன் அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள வசந்தபுரத்தில் 18 வயது பூர்த்தியாகாத பெண்ணிற்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சைல்டுலைன் அலுவலகத்திற்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி சமூகநலத்துறை அலுவலர் வில்லி, சைல்டுலைன் ஊழியர் சங்கர் மற்றும் வேலூர் வடக்கு காவல்துறையினர் அந்தப் பகுதிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது வசந்தபுரத்தை சேர்ந்த 15வயது மாணவிக்கும், திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கேளூர் பகுதியில் வசிக்கும் 26 வயது வாலிபருக்கும் திருமணம் நடைபெற இருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து சைல்டுலைன் அதிகாரிகள் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தியதோடு, பெற்றோர்களிடம் 18 வயது நிரம்பிய பின்புதான் மாணவிக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று எழுதி வாங்கியுள்ளனர். இதேபோன்று திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏரியூர் கிராமத்திலும் 16 வயது மாணவிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும் இது கொரோனா காலகட்டம் என்பதனால் இந்த 2 மாணவிகளையும் அரசு காப்பகத்தில் சேர்க்க இயலவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |