Categories
மாநில செய்திகள்

அடையாள அட்டை இல்லாத திருநங்கைகளுக்கு….. கொரோனா நிவாரண நிதி ரூ.4000…. தமிழக அரசு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின், கொரோனா நிவாரண நிதியாக குடும்ப ரேஷன் அட்டைதாரர்களுக்கு 4 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்ற கோப்பில் கையெழுத்திட்டார். அதன்படி முதல் தவணையாக 2000 ரூபாய் வழங்கும் பணி கடந்த மே 15ஆம் தேதி தொடங்கியது. மேலும்  தமிழகத்தில் வருகின்ற ஜூன் 3 ஆம் தேதி முதல்  இரண்டாம் தவணை கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாய் வழங்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரேஷன் அட்டை மட்டும் அடையாள அட்டை இல்லாத மூன்றாம் பால் இனத்தவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் கொரோனா நிவாரண நிதியை வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று தூத்துக்குடியை சேர்ந்த கிரேஸ் பானு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரின் மனுவில், மூன்றாம் பாலினத்தவர் களுக்கு கொரோனா தடுப்பு ஊசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் அவர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்களை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கூறியிருந்தார்.

அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அந்த விசாரணையில் மூன்றாம் பாலினத்தவர் களுக்கு நிவாரண உதவி வழங்குவது பற்றி பரிசீலிக்கப்படும் என்று நீதிபதி கூறினார். இதைப் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் இது சம்பந்தமாக முடிவெடுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும் இதுபற்றி எடுத்த நடவடிக்கை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு உள்ளனர். எனவே இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |