Categories
மாநில செய்திகள்

கொரோனா நோயாளிகளுக்கான ஆசிரமம்…. இயக்குனர் லிங்குசாமிக்கு குவியும் பாராட்டு….!!!!

தமிழில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான ஆனந்தம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக லிங்குசாமி அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து அவரின் பல்வேறு படங்கள் ஹிட் கொடுத்துள்ளது. தற்போது தெலுங்கில் ராம் பொத்தினெனி நடிக்கும் படத்தை இயக்க லிங்குசாமி ஒப்பந்தமாகியுள்ளார். ஆனால் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமலில் இருப்பதால் அந்த படத்தின் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அவர் கொரோனா நோயாளிகளுக்காக ஆசிரமம் ஒன்றை திறந்துள்ளார்.

சென்னை மணப்பாக்கத்தில் இந்த ஆசிரமம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்த ஆசிரமத்தின் திறப்பு விழாவில் நடிகை கீர்த்தி சுரேஷ், நடிகர் மற்றும் எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பரசன் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்கள் அனைவருக்கும் இயக்குனர் லிங்குசாமி டுவிட்டர் வாயிலாக தனது நன்றியை தெரிவித்துள்ளார்.அதுமட்டுமல்லாமல் அவரின் இந்த பணிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகிறார்கள்.

Categories

Tech |