Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

போதைக்காக இப்படியா பண்ணுறது…? நண்பர்களுக்கு நடந்த துயரம்… காவல்துறையினரின் தீவிர விசாரணை…!!

போதைக்காக எலுமிச்சம் சாறை தின்னரில் கலந்து குடித்தால் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள குன்னவாக்கம் பகுதியில் சங்கர் என்ற கூலித்தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் சிவசங்கர், கிருஷ்ணா என்ற இரு நண்பர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் நண்பர்களான இந்த மூன்று பேரும் போதைக்காக தின்னரில் எலுமிச்சை சாறை கலந்து குடித்துள்ளனர். இதனையடுத்து திடீரென மயங்கி விழுந்த சங்கரை அருகில் உள்ளவர்கள் மீட்டு உடனடியாக ஸ்ரீபெரும்புதூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே சங்கர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் ஆபத்தான நிலையில் சிவசங்கரும், கிருஷ்ணாவும் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் இச்சம்பவம் குறித்து ஒரகடம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |