இங்கிலாந்து- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி வருகின்ற ஜூன் மாதம் 2 ம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிக்கொள்ளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் ஜூன் 18ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தப் போட்டிக்கு முன்பாக நியூசிலாந்து அணி இங்கிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது . முதல் டெஸ்ட் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் ஜூன் 2 ம் தேதி நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து 2 வது டெஸ்ட் போட்டி எட்ஜ்பாஸ்டனில் ஜூன் 10ஆம் தேதி நடைபெற உள்ளது. எனவே இந்த போட்டியை காண்பதற்காக தினந்தோறும் 18 ஆயிரம் அல்லது மைதானத்தின் மொத்த கொள்ளளவில் 70% ரசிகர்களை அனுமதிக்க இங்கிலாந்து திட்டமிட்டுள்ளது. இதனால் இந்தப் போட்டியை காண வருபவர்கள் 16 வயது நிரம்பியவர்களாகவும், போட்டியை காண வரும் ரசிகர்கள் 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா ‘நெகட்டிவ்’ சான்றிதழை வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.