தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் தீவிரமடைந்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தளர்வுகளற்ற ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தில் தாழ்வழுத்த மின் நுகர்வோர் மின் கட்டணம் செலுத்த ஜூன் 15ம் தேதி வரை அவகாசத்தை நீட்டித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி, சிறு குறு தொழிற்சாலைகள், தாழ்வழுத்த மின் நுகர்வோர், கூடுதல் வைப்பு தொகை செலுத்தவும் கால அவகாசத்தை ஜூன் 15 வரை நீடித்துள்ளது. மேலும் ஏப்ரல் மாத மின்கட்டணம் செலுத்தாத உயர்மின் அழுத்த மின் இணைப்புகளுக்கு தாமத கட்டணத்துடன் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.