Categories
இந்திய சினிமா சினிமா தமிழ் சினிமா

அட்லி-ஷாருக்கான் இணையும் படம் எப்போது தொடங்கும்?… வெளியான செம மாஸ் தகவல்…!!!

அட்லி- ஷாருக்கான் கூட்டணியில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதை தொடர்ந்து இவர் நடிகர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் ஆகிய மூன்று சூப்பர்ஹிட் படங்களை இயக்கியிருந்தார். இதன்பின் அட்லியின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது. ஆனால் கடந்த சில மாதங்களாக பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் அடுத்த படத்தை அட்லி இயக்க இருப்பதாக தகவல் பரவி வந்தது.

 

BREAKING: Atlee CONFIRMS his next film with Shah Rukh Khan! : Bollywood  News - Bollywood Hungama

மேலும் இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டதாகவும் கூறப்பட்டது. தற்போது நடிகர் ஷாருக்கான் ‘பதான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இந்த படம் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து கொண்டிருக்கின்றனர்.

Categories

Tech |