மத்திய அரசின்மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லியில் விவசாயிகள் தங்களுடைய போராட்டத்தை தொடங்கினர். இதற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். போராட்டம் தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்துள்ளது. இருப்பினும் விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசிடம் இருந்து எந்த ஒரு பலனும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் மூன்று வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகள் போராட்டம் தொடங்கி ஆறு மாத காலம் நிறைவடைந்துள்ள நிலையில் மத்திய அரசு ஆக்கப்பூர்வமான பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாதது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளார்.மேலும் வேளாண் சட்டங்கள் தொடர்பாக திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளார்.