Categories
தேசிய செய்திகள்

இந்த செய்தி வதந்தி…. மக்கள் யாரும் நம்ப வேண்டாம்…. மருத்துவர் அறிவுரை….!!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கையும் உயிர் இறப்பவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பணியாக நாடு முழுவதும் முழு ஊரடங்கு மட்டும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு மத்தியில் கொரோனா  விலங்குகளிடமிருந்து பரவுவதாக ஒரு பொய்யான செய்தி மக்களிடையே பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் விலங்குகளிடமிருந்து கொரோனா மனிதர்களுக்கு பரவும் என்பது வதந்தி என்று டெல்லி கால்நடை மருத்துவர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். நோய்களால் பாதிக்கப்பட்ட விலங்குகளுக்கு சிகிச்சை அளித்த போதும் எனக்கு கொரோனா ஏற்படவில்லை. கொரோனா பாதிக்கும் என்ற வதந்தியை நம்பி செல்லப்பிராணிகளை வளர்ப்போர் அவற்றை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |