Categories
சினிமா தமிழ் சினிமா

செல்லமே, தங்கமே, பட்டுக்குட்டி… புகழின் கியூட்டான பிறந்தநாள் வாழ்த்து… யாருக்கு தெரியுமா?…!!!

குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கியின் பிறந்தநாளுக்கு புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி-2 நிகழ்ச்சி ரசிகர்களிடையே மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்தது. இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா உள்ளிட்டோர் போட்டியாளர்களாகவும் பாலா, புகழ், சிவாங்கி, மணிமேகலை உள்ளிட்டோர் கோமாளிகளாகவும் கலந்து கொண்டிருந்தனர். இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் கோமாளிகளை வைத்துக் கொண்டு சமையல் செய்யப் படாத பாடு படும் காட்சிகள் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது. அதிலும் குறிப்பாக புகழ், சிவாங்கி இருவரும் அண்ணன்- தங்கையாக செய்யும் சேட்டைகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமீபத்தில் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

https://twitter.com/Pugazh_VijayTv/status/1397037742714867712

இந்நிலையில் இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சிவாங்கிக்கு இன்று பிறந்தநாள். இதையடுத்து அவருக்கு குக் வித் கோமாளி பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் புகழ் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ‘ஹேப்பி பர்த்டே சிவாங்கி. செல்லமே, லவ் யூ தங்கமே, மிஸ் யூ பட்டுக்குட்டி. அண்ணா எப்போதும் உன் கூடவே இருப்பேன் டா’ என கியூட்டாக வாழ்த்து தெரிவித்துள்ளார் . அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |