Categories
லைப் ஸ்டைல்

சிகெரட் வெறியர்களுக்கு இன்ப அதிர்ச்சி… நீங்களும் வாழலாம்… ஆய்வில் தகவல்..!!

புகைப் பழக்கத்தை கைவிடும் நபர்களுக்கு 5ஆண்டுகளில் இதய குழல் சார்ந்த நோய்கள் வரும் அபாயம் 40 சதவீதம் குறைவதாக ஆய்வு ஒன்று கணித்துள்ளது.

அமெரிக்காவில் டென்னசி மாகாணத்திலுள்ள நேஷ்வில்லேவின் வேண்டர் பில்ட்   பல்கலைக்கழகம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் சுமார் 8600 பேர் பங்கேற்றனர். அவர்களில் 3500 பேர் பல வருடங்களாக புகைப்பிடித்து வந்துள்ளனர். எஞ்சியவர்கள் அவர்களின் மகன், மகள்கள் வயது வந்த பேரன் பேத்திகள் அவர். புகை பிடிக்கும் பழக்கத்தை கைவிட்டு 5 ஆண்டுகள் ஆனவரிடம் ஆய்வு மேற்கொண்டதில்,

Image result for smoking

அவர்களுக்கு இதய,இருதய குடல் சார்ந்த கேன்சர் நோய்கள் வருவதற்கான வாய்ப்பு 40 சதவீதம் குறைவாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. புகைப் பழக்கம் இல்லாதவர்களுக்கு இணையான இதய, நுரையீரல் கொண்ட நல்ல ஆரோக்கியத்தை பெற புகை பழக்கம் உள்ள நபர் 10 முதல் 25 ஆண்டுகள் வரை அந்த புகை பழக்கத்தை கைவிட்டு இருந்தால் போதும் என்று ஆய்வு கணித்துள்ளது. அமெரிக்காவில் வயது வந்தோரில் புகைப் பழக்கம் கொண்டவர்களின் எண்ணிக்கை 1960-களில் 42 சதவீதமாக இருந்த நிலையில், தற்போது வெறும் 13 சதவீதமாக குறைந்துள்ளது என்று ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.

Categories

Tech |