கொரோனா பரவல் அதிகரிக்கும் நேரத்தில் விமானத்தில் நடைபெற்ற திருமணத்துக்கு அனுமதி அளித்தது குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அணி சேகர் ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் மேலாளருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
மதுரையிலிருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் மதுரையைச் சேர்ந்த தொழில் அதிபர் மகன் ராகேஷ் மற்றும் சக்ஸிதா திருமணம் நடைபெற்றது. இது குறித்து வீடியோ புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆனது. இதனைத் தொடர்ந்த கொரோனா காலங்களில் இத்தகைய திருமணம் நடைபெற அனுமதி அளித்தது குறித்து மாவட்ட ஆட்சியர் சார்பில் மதுரை விமான நிலைய இயக்குனர் மற்றும் ஸ்பைஸக் நிறுவன மேலாளர் மகேஷ் ஆகியோருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
மேலும் கொரோனா பாதுகாப்பு காலங்களில் விதிமுறைகளை பின்பற்றவில்லை என மத்திய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சகம் இது குறித்து விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.