புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாமில் பொது மக்கள் பலர் கலந்து கொண்டு தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அசோக் நகரில் கொரோனா தடுப்பூசி மருத்துவ முகாம் நடைபெற்றுள்ளது. அந்த முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்துள்ளார். மேலும் முகாமில் கலெக்டர் உமாமகேஸ்வரி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்பட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
இதனையடுத்து முகாமில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு கொரோனா பரிசோதனை செய்து பலர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும் முகாமில் நகராட்சி வாகனங்கள் மூலம் காய்கறி விற்பனையை அமைச்சர் ரகுபதி தொடங்கி வைத்துள்ளார்.