பிரான்ஸில் சமீபத்தில் வெளியான ஆய்வில், பெரும்பாலான இளைஞர்கள் ஜோதிடத்தின் மீது அதிக கவனம் செலுத்துவதாக தெரியவந்திருக்கிறது.
பிரான்சில் 18 லிருந்து 24 வயது வரை உள்ள இளைஞர்களில் சுமார் 70% பேர் ஜோதிடம் தொடர்பான விஷயங்களை நம்புகிறார்களாம். அதாவது அந்த ஆய்வில் நாட்டில் உள்ள இளைஞர்களில் பத்தில் நான்கு பேர் ஜோதிடத்தில் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் கொரோனா பரவத்தொடங்கிய காலத்தில் நடைமுறைப்படுத்தப்பட்ட ஊரடங்கில் இந்த அளவிற்கு ஜோதிடத்தில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லையாம்.
ஆனால் தற்போது இந்த இரண்டாம் அலையில், இணையதளங்கள் மூலமாக அதிகமானோர் ஜோதிடம் சார்ந்தவற்றை அதிக ஆர்வத்துடன் பார்ப்பதாக கூறப்பட்டுள்ளது. ஜோதிடம் மற்றும் ஜாதகம் கணிக்கக்கூடியவர்கள், இதனால் தங்களுக்கு அதிக வருமானம் கிடைக்கிறது என்று கூறியுள்ளார்கள்.