Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஊரடங்கின் போது மூடப்பட்ட… 931 ரேஷன் கடைகள்… வரிசையில் நின்று பொதுமக்கள் அவதி…

நாமக்கல் மாவட்டத்தில் முழு ஊரடங்கின் போது ரேஷன் கடைகள் அடைக்கப்பட்டதால் பொதுமக்கள் சிரமப்பட்டுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக நேற்று முதல் மே 31 வரை முழு ஊரடங்கு அறிவித்திருந்த நிலையில் காய்கறி, மளிகை கடைகள் மூடப்பட்டதை தொடர்ந்து ரேஷன் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள சுமார் 931 ரேஷன் கடைகள் அனைத்தும் நேற்று மூடப்பட்டுள்ளன. இதனை அறியாத சில குடும்ப அட்டைதாரர்கள் ரேஷன் கடைக்கு சென்று அரிசி சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

இதனையடுத்து கொரோனா நிவாரண நிதி 2000 ரூபாயும் வாங்க முடியாததால் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனைத்தொடர்ந்து முழு உரடங்கின்போதும் ரேஷன் கடைகள் காலை 8 மணி முதல் 12 மணி வரை திறக்க தமிழக அரசு நேற்று மாலை அனுமதி அளித்துள்ளது. மேலும் இன்று முதல் ரேஷன் கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர்.

Categories

Tech |