Categories
கிரிக்கெட் விளையாட்டு

இந்திய அணியை புகழ்ந்து தள்ளிய …. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்  இயன்சேப்பல்…!!!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்  , இந்திய அணி சிறப்பாக செயல்பட்டதை குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன்  இயன்சேப்பல் பாராட்டி பேசியுள்ளார்  .

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 2 – 1 என்ற  கணக்கில், தொடரை கைப்பற்றியது. இதில் குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமாக தோல்வியை சந்தித்தது.  ஆனால் அணியில் விராட் கோலி இல்லாமல் தொடரை கைப்பற்றியது மிகவும் பாராட்டுக்குரிய விஷயம் ஆகும். அத்துடன் ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும், முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் காயமடைந்த போது இந்திய அணியில் மாற்று வீரர்கள் களம் இறங்கினர். ஆனால் களமிறங்கிய மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தன.

இது குறித்து பேசிய ஆஸ்திரேலிய அணியின்  முன்னாள் கேப்டனும், வர்ணனையாளருமான இயன்சேப்பல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.  அவர் கூறும்போது, இந்திய கிரிக்கெட் அணி வேகப்பந்து வீச்சில், மிகவும் பலம் வாய்ந்ததாக காணப்படுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மாற்று வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக விளையாடி வெற்றிகரமாக ஆட்டத்தை, முடித்ததை நம்மால் பார்க்க முடிந்தது. நடந்த 4 டெஸ்ட் போட்டியிலும் வேகப்பந்து வீச்சை மாற்றவேண்டிய நிலை  ஏற்பட்டது. இதனால்  போட்டி அட்டவணையில் ,சவாலை எதிர்கொள்ளும் வகையில் ,இந்திய அணி திறமையான வேகப்பந்து வீச்சாளர்களை கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

Categories

Tech |