சென்னை அடையாறில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று களப்பணியாளர்கள் நீக்கிவிட்டு நாங்கள் சொல்பவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டுவதாக ஓபிஎஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்ததாவது: “அரசு அதிகாரிகளை கட்சிக்கு அப்பாற்பட்டவர்களாக பார்க்கவேண்டும். அவர்களும் அப்படியே நடக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார் பேரறிஞர் அண்ணா. அதாவது அரசு பணிகளில் கட்சியினர் தலையீடு இருக்கக் கூடாது என்பது தான் அதன் பொருள். இதற்கு முற்றிலும் முரணான வகையில் திமுகவின் செயல்பாடுகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், சென்னையை பொருத்தவரை நாளொன்றுக்கு 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு வருகின்றன.
இதில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை சற்று ஆறுதல் தரும் வகையில் உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் திமுகவினர் சென்னை அடையாரில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு சென்று தற்போது இருக்கும் களப்பணியாளர்களை நீக்கிவிட்டு நாங்கள் சொல்பவர்களை பணியில் அமர்த்த வேண்டும் என்று மிரட்டி இருப்பதாகவும், அதற்கு அதிகாரிகள் கட்சியின் பரிந்துரையின் பேரில் களப்பணியாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என்று தெரிவித்ததாகவும், பயிற்சி பெற்று திறம்பட பணியாற்றி கொண்டிருக்கும் தற்போதைய பணியாளர்களை மாற்றி அமைத்தால் நோய் தடுப்பு பணி தொய்வு ஏற்படும் எனவும் கூறியதாக பத்திரிகையில் வெளிவந்துள்ளது.
இதுபோன்ற முறையை அனைத்து இடங்களிலும் திமுகவினர் கடைபிடித்தால் நோய்த்தொற்று பணியில் தொய்வு ஏற்பட்டு பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறியுள்ளார். இது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு அவப்பெயர் ஏற்பட கூடிய சூழ்நிலையை உருவாக்கும். எனவே உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணிகள் தங்குதடையின்றி நடக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக தலையிட்டு, "அரசுப் பணிகளில் குறுக்கீடு செய்து நோய் தடுப்பு பணிகளில் தொய்வு ஏற்படுத்தும் கட்சியினர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கேட்டுக் கொள்கிறேன். pic.twitter.com/vxDRPZwgpG
— O Panneerselvam (@OfficeOfOPS) May 24, 2021