Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

சாலைகளில் சுற்றிய கொரோனா நோயாளி…. விளக்கம் கொடுத்த மருத்துவ அலுவலர் …!!

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு மருத்துவம் பெற்று வந்த நோயாளி ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி சுற்றித்திரிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் அரூர் அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு மருத்துவம் பெற்று வந்த முதியவர் ஒருவர் மருத்துவமனையை விட்டு வெளியேறி நடந்து சென்றதாக கூறப்படுகிறது. சிறிது தூரம் நடந்து சென்று அவர் நடக்க முடியாமல் மூச்சு வாங்கியதால் கச்சேரி மேடு பகுதியில் உள்ள அச்சகத்தின் முன்பு தரையிலேயே படுத்து உறங்கியதாக தெரிகிறது. இத்தகவலறிந்து வந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் முதியவரை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரூர் மருத்துவமனை மருத்துவ அலுவலர் ராஜேஷ்கண்ணா கூறுகையில் மருத்துவமனையில் போதிய அளவில் பணியாட்கள் இல்லாததால் நோயாளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாகவும் பணியாட்களை அதிகப்படுத்தினால் இதுபோன்ற செயல்கள் நடக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |