தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சென்னை கிங் அரசு மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை மையத்தை திறந்து வைத்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்திக்கையில் , “நோய்த்தொற்றால் லேசாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரைப்படி வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம்.
மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் தவிர்க்காமல் உடனே செல்லவும் என்றும் தமிழகத்தில் 890 தனியார் மருத்துவமனைகளில் அரசின் காப்பீட்டுத் திட்டத்தில் சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை அளிப்பது பற்றி தனியார் மருத்துவமனைகளில் பெயர் பலகை வைக்கவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.