Categories
அரசியல் தேசிய செய்திகள்

விலைக்கு வாங்க முடியலைனா சிபிஐ வைத்து மிரட்டுவதா..? மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்..!!

விலைக்கு வாங்க முடியாத காங்கிரஸ் தலைவர்களை சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது.

மத்திய அரசின் தோல்விகளை அம்பலப்படுத்தியதால் தான் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ துடிப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டி உள்ளது. குறிப்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பா.சிதம்பரம் மீது சிபிஐ எடுத்துள்ள  நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், மத்திய அரசின் தோல்விகளையும் உண்மைகளையும் அச்சமின்றி வெளிப்படுத்தியதால் தான் பா.சிதம்பரத்தை வேட்டையாட மத்திய அரசு துடிக்கிறதுஎன்றும்,

Image result for congress

இது வெட்கக்கேடான செயல் என்றும் அவர் சாடியுள்ளார். பா.சிதம்பரத்துடன் காங்கிரஸ் எப்போதும் துணை நிற்கும் என்று பிரியங்கா காந்தி உறுதிபடக் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கர்நாடகா, கோவா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள காங்கிரஸ் எம்எல்ஏக்களை பாஜக விலைக்கு வாங்கி வந்தது. இந்நிலையில் விலைக்கு வாங்க முடியாத எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து சிபிஐ மூலம் மத்திய அரசு மிரட்டுவதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

Categories

Tech |