Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல… மழையினால் ஏற்பட்ட விளைவு… மின்னல் தாக்கி மாடு பலி… !!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்னல் தாக்கி பசு மாடு உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் கடும் வெயிலுக்கு மத்தியில் திடீரென பலத்த காற்று மற்றும் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்துள்ளது. அப்போது அப்பகுதியிலுள்ள மேய்ப்பர் என்பவரின் வீட்டிலிருந்த பசுமாடு ஒன்று மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்து விட்டது.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாட்டை மீட்டு பிரேத பரிசோதனை செய்த பின்பு மாட்டை புதைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |