Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

16 வகையான பொருட்களால் அபிஷேகம்… சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர்… பக்தர்களின்றி பூஜை..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் வீர ஆஞ்சநேயர் கோவிலில் சுவாமிக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் பூஜை நடைபெற்றுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி காட்டுப்பகுதியில் வீர ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. அந்த வீர ஆஞ்சநேயர் சுவாமிக்கு சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம் நடைபெற்றுள்ளது. அப்போது பால், விபூதி, திரவியம் மற்றும் பன்னீர் உட்பட 16 வகையான பொருட்களால் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து பழங்கள் மற்றும் துளசி மாலையால் ஆஞ்சநேயருக்கு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக விளக்கு மற்றும் ஒருமுக விளக்குகளால் தீபாராதனை நடைபெற்றுள்ளது. மேலும் ஊரடங்கின் காரணமாக பக்தர்களின்றி பூஜைகள் அனைத்தும் நடைபெற்றது.

Categories

Tech |